FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கனமழை: வேகமாக நிரம்பும் ஏரிகள்!

கனமழையால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருவது தொடர்பாக...

18 அக்டோபர் 2026, 10:14 am IST
செம்பரம்பாக்கம் ஏரி - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் பெய்துவரும் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகள் வேகமாய் நிரம்பி வருகின்றன.

சென்னையில் உள்ள 16 ஏரிகளில் 2 ஏரிகள் 50%, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 117 ஏரிகள் 50%, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 31 ஏரிகள் 50% நிரம்பி இருக்கின்றன.

சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரிக்கு விநாடிக்கு 1,485 கன அடி நீர் வந்துக்கொண்டிருக்கிறது. நேற்று(அக். 17) விநாடிக்கு 663 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது விநாடிக்கு 1,485 கன அடியாக அதிகரித்துள்ளது

Advertisement

Advertisement

பூண்டி ஏரிக்கான நீர்வரத்து விநாடிக்கு 290 கன அடியிலிருந்து விநாடிக்கு 1000 கன அடியாக அதிகரித்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று விநாடிக்கு 576 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று விநாடிக்கு 655 கன அடியாக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து, மழை பெய்து வருவதால், ஏரிக்கு வரும் நீரின் அளவு மற்றும் நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

summary

Due to the heavy rains in Tamil Nadu, lakes in Chennai, Kanchipuram, and Chengalpattu districts are filling up rapidly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments