இன்ஸ்டாகிராமில் ஆபாச கருத்து: நடிகை ரம்யா காவல்துறையிடம் புகார்
இன்ஸ்டாகிராமில் தன்னைப் பற்றி ஆபாசமான கருத்து தெரிவித்தவர் மீது நடிகை ரம்யா காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் தன்னைப் பற்றி ஆபாசமான கருத்து தெரிவித்தவர் மீது நடிகை ரம்யா காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
தமிழில் சிம்புவுடன் இணைந்து குத்து, தனுஷூடன் இணைந்து பொல்லாதவன் படங்களில் நடித்தவர் திவ்யா. தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் ஆபாசமான கருத்து தெரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெங்களூரு நகர சைபர் குற்றவியல் காவல்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிக்க | திருப்பதியில் விதிமீறல்: மன்னிப்பு கேட்டு விக்னேஷ் சிவன் கடிதம்
Advertisement
Advertisement
திவ்யாவின் இன்ஸ்டாகிராம் பக்க பதிவில், அவர் குறித்து ஒருவர் ஆபாசமாக கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. தன்னைப் பற்றி ஆபாசமாக கருத்து கூறியவர் மீது ரம்யா பெங்களூர் நகர சைபர் குற்றவியல் காவல்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து அந்த நபர் மீது தகவல் தொழில் நுட்ப சட்டம் 2008-ன் படி வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான திவ்யா, காங்கிரஸ் கட்சி சார்பாக அரசியலில் ஈடுபட்டுவருகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.