முகப்பு
செய்திகள்

'எனக்கு கஷ்டமா இருக்கு...'' - நெல்சனுக்கு ஆதரவாக களமிறங்கிய லோகேஷ் கனகராஜ்

பீஸ்ட் படம் குறித்து இயக்குநர் நெல்சன் விமர்சிக்கப்படும் நிலையில், லோகேஷ் கனகராஜ் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். 

Updated On : 11 ஜூன் 2022, 5:11 pm IST
பகிர்:

பீஸ்ட் படம் குறித்து இயக்குநர் நெல்சன் விமர்சிக்கப்படும் நிலையில், லோகேஷ் கனகராஜ் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான விக்ரம் திரைப்படம் பெரும் பெற்றிப்படமாக அமைந்தது. வெளியான 7 நாட்களில் ரூ.250 கோடி வசூலித்து சாதனை படைத்தது. 

இந்த நிலையில் விக்ரம் பட வெற்றியை முன் வைத்து, இயக்குநர் நெல்சன் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவந்தார்.இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நெல்சன் தெரிவித்ததாவது, எனக்கு நிஜமாகவே கஷ்டமா இருக்கு. நெல்சன் எனக்கு ஒரு நல்ல நண்பர். நாளைக்கு எனக்கே கூட பெரிய தோல்வி வரும். 

Advertisement

Advertisement

எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கு. ஒருவர் வெற்றி அடையும்போது கொண்டாடும் நாம் அவர் தோல்வியடையும் போது இப்படி விமர்சனம் செய்யக்கூடாது. வெற்றி, தோல்வி என்பது சகஜம் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.