முதன்முறையாக சின்னத்திரை தொடரில் நடிக்கும் சத்யராஜ், ஊர்வசி
ஜி தமிழ் டிவி தொடரில் சத்யராஜ், ஊர்வசி கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜி தமிழ் டிவி தொடரில் சத்யராஜ், ஊர்வசி கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹிந்தியில் வெற்றிபெற்ற பதாய் ஹோ என்ற படத்தின் தமிழ் பதிப்பு வீட்ல விசேசம் என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் வருகிற 17 ஆம் திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தை பிரபலப்படுத்தும் பணிகளில் ஆர்ஜே கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டு வருகிறார். முன்னதாக ஐபிஎல் போட்டியின்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | ''என்னைப் பற்றி பேசுவதற்கு பதிலா...'' - சிவாங்கி கொடுத்த பதிலடி
இந்த நிலையில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் சிறப்பு விருந்தினர்களாக சத்யராஜ் மற்றும் ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர். சின்னத்திரை தொடரை லட்சக்கணக்கான மக்கள் பார்ப்பதால் வீட்ல விசேசம் படத்துக்கு நல்லதொரு விளம்பரமாக அமையும் என்று கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.