'பீஸ்ட்' படத்தின் முக்கிய புகைப்படம் கசிந்ததால் பரபரப்பு
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்திலிருந்து முக்கிய காட்சியின் புகைப்படம் ஒன்று கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தை நெல்சன் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்தப் படத்திலிருந்து புகைப்படம் ஒன்று கசிந்துள்ளது. படத்தொகுப்பு பணியின்போது இந்தப் படம் கசிந்திருக்கலாம். அதில் ஃபோனில் பேசிக்கொண்டிருக்க பின்னணியில் குதிரைகள் மேய்ந்தபடி இருக்கின்றன. இந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களிலிருந்து தயாரிப்பு நிறுவனம் நீக்கி வருகிறது.
இதையும் படிக்க | ''எதிர்போர் செயலுக்கும்...'': முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
Advertisement
Advertisement
இந்தப் புகைப்படத்தை வைத்து துப்பாக்கி, கத்தி படங்களைப் போல இதிலும் 'ஐ ஆம் வெயிட்டிங்' என விஜய் சொல்வதுபோன்ற காட்சி இடம் பெறுமோ என்று ரசிகர்கள் சந்தேகித்து வருகின்றனர்.
பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையில் இந்தப் படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் பாடல் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.