சிம்பு தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்
நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னைப் பற்றி அவதூறு செய்தி பரப்பியதாக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மீது நடிகர் சிம்பு ரூ.1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கம் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிக்க | பிரபல நடிகையின் துணிக்கடையில் தீ விபத்து: துணிகள் எரிந்து நாசம்
இந்த நிலையில் இந்த வழக்கில் 1080 நாட்கள் ஆகியும் எழுத்துப்பூர்வமான வாதங்களை சமர்பிக்காததால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
இந்த அபராதத் தொகையை வருகிற மார்ச் 31க்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் சிம்பு நடித்த 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தை குளோபல் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் சார்பாக மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதையும் படிக்க | நடிகர் ரஜினிக்கு முதன்முதலாக ரசிகர் மன்றம் ஆரம்பித்த முத்துமணி மரணம்
இந்த நிலையில் நடிகர் சிம்பு தங்களுக்கு முறையான ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் படம் தோல்வி அடைந்ததற்கு சிம்புவே காரணம் எனவும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.