நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, நடிகர் செல்வராகவன் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ரெடின் கிங்க்ஸ்லே, அபர்னா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | காதலுக்கு வயது 23: அஜித் ஷாலினிக்கு கொடுத்த முத்தம்: முன்னுதாரணமாக திகழ்வதாக ரசிகர்கள் நெகிழ்ச்சி
Advertisement
Advertisement
இந்தப் படம் வருகிற ஏப்ரல் 13 திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி கேஜிஎஃப் 2 படமும் வெளியாவதால், இரண்டு படங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில் இந்தப் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்துக்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. மேலும் இந்தப் படம் 2 மணிநேரம் 35 நிமிடம் ஓடக் கூடியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.