சிரஞ்சீவி நடித்த ஆச்சார்யா: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
சிரஞ்சீவி நடித்த ஆச்சார்யா படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
சிரஞ்சீவி நடித்த ஆச்சார்யா படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
கொரடாலா சிவா இயக்கிய ஆச்சார்யா படத்தில் கதாநாயகனாக நடித்தார் சிரஞ்சீவி. இது அவருடைய 152-வது படம். ராம் சரண், பூஜா ஹெக்டே போன்றோரும் நடித்தார்கள். இசை - மணி சர்மா. ஒளிப்பதிவு - திரு. மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கிய இந்தப் படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.
ஏப்ரல் 29 அன்று திரையரங்குகளில் வெளியான ஆச்சார்யா படம், அமேசான் பிரைம் ஓடிடியில் மே 20 முதல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.