முகப்பு
செய்திகள்

‘டேய்...ப்ளீஸ்டா ஒரேயொரு போஸ் குடுடா...’: கெஞ்சும் கீர்த்தி சுரேஷின் க்யூட் விடியோ

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனையுடன் கொஞ்சும் க்யூட் விடியோவை பதிவிட்டுள்ளார்.

Updated On : 14 நவம்பர் 2022, 9:46 pm IST
பகிர்:

தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி திருப்புமுனையாக அமைந்தது.

இதனையடுத்து கமர்ஷியல் படங்களுடன் தனி கதாநயாகியாகவும் படங்களில் அசத்தி வருகிறார். அப்படி அவர் தனி கதாநாயகியாக நடித்த மிஸ் இந்தியா, பென்குயின் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை எனினும் சாணிக் காயிதம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. 

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன், தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா போன்ற படங்களில் நடித்துவருகிறார். 

Advertisement

Advertisement

கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனையுடன் க்யூட்டாக கொஞ்சும் விடியோவை பதிவிட்டுள்ளார். இதில் “டேய்.. ப்ளீஸ்ரா.. குழந்தைகள் தினவிழாக்கு ஒரேயொரு போட்டோ போஸ் குட்ரா...” என அவர் க்யூட்டாக கொஞ்சும் விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.