சந்தோஷ செய்தியைப் புகைப்படங்களுடன் பகிர்ந்த நடிகை பூஜா!
2023 எங்களுக்குச் சிறப்பானதாக இருக்கப்போகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை பூஜா ராமச்சந்திரன் சமூகவலைத்தளத்தில் மகிழ்ச்சிகரமான செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
எஸ்.எஸ். மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து புகழ்பெற்றவர் பூஜா. 2012-ல் காதலில் சொதப்புவது எப்படி படத்தில் நடிகையாக அறிமுகமானார் பூஜா. அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 2019-ல் நடிகர் ஜானைத் திருமணம் செய்துகொண்டார். சார்பட்டா பரம்பரை படத்தில் வில்லனாக நடித்துப் புகழடைந்தார் ஜான். தற்போது துணிவு, கேப்டன் மில்லர் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூகவலைத்தளங்களில் அறிவித்துள்ளார் நடிகை பூஜா. தன் கணவர் ஜானுடன் இணைந்த புகைப்படங்களைப் பகிர்ந்து, 2023 எங்களுக்குச் சிறப்பானதாக இருக்கப்போகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.