நெட்பிளிக்ஸில் வெளியானது ‘1899’ இணையத் தொடர்
இணையத் தொடர் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ’1899’ தொடர் இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.
இணையத் தொடர் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ’1899’ தொடர் இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.
உலகம் முழுவதும் பிரபல ஓடிடி தளமாக அறியப்படும் நெட்பிளிக்ஸ் பல்வேறு நாடுகளில் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. சர்வதேச திரைப்படங்கள் ஒருதளத்தில் கிடைப்பதால் நெட்பிளிக்ஸ் தளத்தின் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகம்.
இந்நிலையில், ‘டார்க்’ என்கிற இணையத் தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அதே படக்குழுவினர் உருவாக்கியிருக்கும் ‘1899’ என்கிற புதிய இணையத் தொடரின் அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
Advertisement
Advertisement
தற்போது, நெட்பிளிக்ஸில் 8 எபிசோடுகளைக் கொண்ட 1899 தொடரின் முதல் சீசன் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.