ஜோதிகா- மம்மூட்டி இணையும் புதிய பட அறிவிப்பு!
நடிகை ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.
நடிகை ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.
தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமான நடிகை ஜோதிகாவின் பிறந்தநாளன்று புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜோதிகா கடைசியாக 2021ஆம் ஆண்டு சசிகுமாருடன் நடித்த ‘உடன்பிறப்பு’ படம் வெளியானது. தற்போது பிறந்தநாளன்று பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நடிக்க உள்ளார். படத்திற்கு ‘காதல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தினை ஜியோ பேபி இயக்குகிறார். இவர் இயக்கத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. இதை தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரீமேக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் மம்மூட்டி இந்த படத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “பிறந்தநாள் வாழ்த்துகள் ஜோதிகா” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.