'வீரம்' பட ரீமேக் படப்பிடிப்பு தளத்தில் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு காயம்
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் நடிகை பூஜா ஹெக்டே காயம் அடைந்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் நடிகை பூஜா ஹெக்டே காயம் அடைந்துள்ளார்.
இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்த முகமூடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்தப் படத்தின் தோல்வியினால் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
பின்னர் தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்துவந்த பூஜா ஹெக்டேவுக்கு தெலுங்கில் வெற்றிபெற்ற அல வைக்குந்தபுரமுலோ திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்ற புட்டபொம்மா உள்ளிட்ட பாடல்கள் தேசிய அளவில் கவனம் பெற்றன.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | ''நல்ல கதை பெருசா ஜெயிக்கும்'' - 'சர்தார்' மற்றும் 'பிரின்ஸ்' படங்கள் குறித்து சூர்யா
இதன் காரணமாக தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். அந்த வகையில் தமிழில் நெல்சன் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.
தற்போது அஜித்தின் 'வீரம்' ஹிந்தி ரீமேக்கான 'கிசி கா பாய் கிசி கி ஜான்' படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது பூஜா ஹெக்டேவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் விரைவில் குணமாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.