பொன்னியின் செல்வன் புதிய போஸ்டர் வெளியீடு
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதையும் பார்க்க: வெந்து தணிந்தது காடு நாயகன் 'சிலம்பரசன்' - புகைப்படங்கள்
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா கடந்த 6 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டு டிரைலரை வெளியிட்டனர்.
Advertisement
Advertisement
அதனைத் தொடர்ந்து, ‘சோழா..சோழா’ ‘ராட்சஸ மாமனே’ ஆகிய பாடல்களின் லிரிக்கல் விடியோ வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில், இன்று அப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், சரத்குமார் என முன்னணி பிரபலங்கள் பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வருகிற செப்.30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.