முகப்பு
செய்திகள்

வெற்றிமாறனின் விடுதலை: கொடைக்கானல் பகுதி படப்பிடிப்பு நிறைவு!

வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தின் கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

Updated On : 19 செப்டம்பர் 2022, 4:47 pm IST
பகிர்:

வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தின் கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

‘அசுரன்’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து ‘விடுதலை’ என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கிறார்.

முன்னதாக,  ‘விடுதலை’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என இயக்குநர் வெற்றிமாறன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

சமீபத்தில் வெற்றி மாறனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகுமென அதிகாரபூர்வ அறிப்பு வெளியானது. 

தற்போது கொடைக்கானல் பகுதியில் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இங்கு சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் உதவியுடன் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.