ட்விட்டரிலிருந்து விலகுகிறேன்: நடிகர் சிவகார்த்திகேயன் அதிரடி
நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரிலிருந்து சிறிதுநாள் விலகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவருக்கு ஃபேமலி ஆடியன்ஸ் அதிகம். தற்போது இயக்குநர் அஸ்வின் மடோன் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இதையும் படிக்க: 2 நாளில் ரூ.100 கோடி: வசூலில் அசத்தி வரும் பொன்னியின் செல்வன் 2
முருகதாஸின் கடைசிப் படமான தர்பார் படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தது. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திற்கும் மோசமான விமர்சனங்கள் எழுந்தது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படம் முடிந்ததும் ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளதாகவும், பான் இந்தியப் படமாக உருவாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ஹாட்டாக இருக்கிறீர்கள்: கீர்த்தி சுரேஷை பாராட்டிய ஸ்ரேயா!
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இல்லாவிட்டாலும் அடிக்கடி போஸ்ட் போடுவார். தற்போது சில காலம் ட்விட்டரிலிருந்து ஒதுங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். விரைவில் உங்களை சந்திப்பேன் எனவும் படத்தினைப் பற்றி இனிமேல் எனது குழுவினை செய்திகளை பரிமாறுவார்கள் என பின்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தற்போது சுற்றுலா செல்வது போல விமானத்தில் இருந்து புகைப்படத்தினை பகிர்ந்து இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.