பதான் படத்தின் மூன்று நாள் வசூல் நிகழ்த்திய சாதனை!
பதான் படம் ஜனவரி 25 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
ஷாருக் கான் நடித்த பதான் படம் முதல் மூன்று நாள்களில் ரூ. 313 கோடி வசூலைப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஷாருக் கான், தீபிகா, ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவாகியுள்ள படம் - பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இசை - விஷால் & ஷேகர்.
2018-ல் ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதன்பிறகு ஷாருக் கான் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் - பதான். இப்படத்தின் முதல் பாடலாக பேஷரம் ரங் பாடல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. யூடியூப் தளத்தில் அப்பாடல் 240 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது.
Advertisement
Advertisement
பதான் படம் ஜனவரி 25 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. பதான் படம் முதல் நாளன்று உலகெங்கும் ரூ. 106 கோடி வசூலை எட்டி அசத்தியது. இரு நாள்களில் ரூ. 219.6 கோடி வசூல் கிடைத்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் முதல் மூன்று நாள்களில் மட்டும் ரூ. 313 கோடியை அள்ளியுள்ளது பதான் படம். இத்தகவலை பாலிவுட் பத்திரிகையாளர் தாரன் ஆதர்ஷ், ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஹிந்திப் படங்களில் ரூ. 300 கோடியை விரைவாக எட்டிய படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது. இந்தியாவில் மட்டும் முதல் மூன்று நாள் வசூலாக ரூ. 201 கோடி கிடைத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.