வெளியானது காவாலா பாடல்!
ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
காவாலா எனத் தொடங்கும் முதல் பாடலின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. தமன்னாவின் நடனத்தில் உருவான இப்பாடல் ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்று இந்தியா முழுவதும் ஒலித்த ‘ஊ அண்டாவா..’ பாடலை நினைவுப்படுத்துவதாகவும் நிச்சயம் ‘காவாலா’ ஏமாற்றாது என ரசிகர்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர்.
இதையும் படிக்க: பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்?
Advertisement
Advertisement
இந்நிலையில், ‘காவாலா’ வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் ஷில்பா ராவ் குரலில் உருவான இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.