முகப்பு
செய்திகள்

காதலனின் புகைப்படத்தினை வெளியிட்ட நடிகை இலியானா! 

நடிகை இலியானா தனது காதலனின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். 

Updated On : 17 ஜூலை 2023, 9:43 pm IST
பகிர்:

கடந்த 2016-ஆம் ஆண்டு சினிமா துறையில் அறிமுகமான நடிகை இலியானா, தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகர் விஜய்க்கு நண்பன் திரைப்படத்தில் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார்.

தொடர்ந்து, பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்து வரும் இலியானா, கடைசியாக பிக் புல் படத்தில் நடித்திருந்தார். தற்போது அன்ஃபேர் அண்ட் லவ்லி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் அறிவித்திருந்தார். குழந்தையின் ஆடைப் புகைப்படம் மற்றும் தான் அணிந்திருக்கும் அம்மா என எழுதப்பட்டிருக்கும் செயினின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். 

இதற்கிடையே, இலியானாவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சிலர் உங்களுக்கு எப்போது திருமணமானது, குழந்தையின் தந்தை பெயர் என்ன என்று கேள்வி எழுப்பி வந்தனர். 

கடந்த ஜூன் 10ஆம் நாள் காதலன் புகைப்படத்தினை மங்கலாக இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து உருக்கமாக எழுதியிருந்தார்.

தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் டேட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். அதில் ‘டேட் நைட்’ என எழுதப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.