செய்திகள்

இணையத்தில் வைரலாகும் லவ் படத்தின் முன்னோட்ட காட்சி!

DIN

நடிகர் பரத்தின் லவ் படத்தின் முன்னோட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவான மிரள் படம் சமீபத்தில் வெளியானது. தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான பரத் தற்போது 50வது படமாக ‘லவ்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படம்  ஜூலை 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்ற லவ் படத்தின் தமிழ் ரீமிக்கை தயாரித்து இயக்கியுள்ளார் ஆர்.பி.பாலா. இந்தப் படத்திற்கு இசை- ரோனி ரஃபேல். ஒளிப்பதிவு- பி.ஜி. முத்தையா. 

தற்போது, இப்படத்தின் முன்னோட்ட காட்சி (ஸ்னீக் பீக்) விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் கோடையின் வாசலிலே என்று தொடங்கும் பாடலை முன்னதாக படக்குழு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தபோல்கர் கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள் தண்டனை! மூவர் விடுதலை!

இம்பாக்ட் விதிமுறை நிரந்தரமானதல்ல: ஜெய் ஷா அதிரடி!

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்வில் 94.39% தேர்ச்சி

கேதார்நாத் கோயில் திறப்பு: அடுத்த 6 மாதங்கள் பக்தர்கள் தரிசிக்கலாம்!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: வேலூர் கடைசி இடம்!

SCROLL FOR NEXT