செய்திகள்

விஜய்யுடன் மீண்டும் நடிக்கும் லோகேஷ் கனகராஜ்?

DIN

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா,  சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன்  ஆகியோர் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக லோகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

த்ரிஷ்யம் 2 படத்தில் மோகன்லாலின் வழக்கறிஞராக நடித்த சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜுயும் லியோவில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மாஸ்டர் படத்தினை தொடர்ந்து இந்தப் படத்திலும் நடிப்பார் என உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் படத்தின் எந்த பகுதியில் நடிப்பாரென என இன்னும் முடிவெடுக்கவில்லையென  தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்குனீர்கள்? ராகுல்

தில்லி மருத்துவமனைகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் -நோயாளிகள் அதிர்ச்சி!

ஆம்புலன்ஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து: நோயாளி கருகிப் பலி!

சுஷில் குமார் மோடி மறைவுக்கு காங்கிரஸ் இரங்கல்!

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

SCROLL FOR NEXT