முகப்பு
செய்திகள்

இந்தப்படம் எப்போதும் கூடுதல் சிறப்பானது: நயன்தாரா நெகிழ்ச்சி!

நடிகை நயன்தாரா தனது எல்லா படங்களை விடவும் இந்தப்படம் மிகவும் சிறப்பு வாய்ந்ததெனப் பதிவிட்டுள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:19 AM
பகிர்:

மலையாளத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு மனசினக்கரே என்ற படத்தின் மூலம் அறிமுகமாயிருந்தார் நயன்தாரா. ஆனால், அப்படம் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. தொடர்ந்து 2005ல் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தில் நாயகியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.

அதன்பின் நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்தார். தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகளால் சினிமாவை விட்டு விலகியிருந்தவர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் நாயகியாக மிகப்பெரிய வருகையை பதிவு செய்து தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உருவெடுத்தார்.

ஒரு படத்திற்கு ரூ.8 கோடியிலிருந்து ரூ.12 கோடி வரை சம்பளம் கேட்கும் நயன்தாரா, சமீபத்தில் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்திருந்தார். அப்படம், அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது. 

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அறம் படம் வெளியாகி 6 ஆண்டுகள். எப்போதும் இந்தப் படம் சிறிது கூடுதலான சிறப்பு வாய்ந்தது” எனப் பதிவிட்டுள்ளார். 

2017இல் வெளியான அறம் படம் நயந்தாராவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்தப் படத்தினை கோபி நயினார் இயக்கியிருந்தார். சமீபத்தில் அதன் டீசர் வெளியானது அவர் தற்போது கருப்பர் நகரம் படத்தினை இயக்கியுள்ளார். விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.