முகப்பு
செய்திகள்

இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் 'சத்திய சோதனை' ஓடிடியிலாவது கவனம் பெறுமா?

நடிகர் பிரேம்ஜியின் சத்திய சோதனை ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

Updated On : 20 நவம்பர் 2023, 6:00 pm IST
பகிர்:

சுரேஷ் சங்கையா ஒரு கிடாயின் கருணை மனு படத்துக்குப் பிறகு சத்தியசோதனை படத்தை இயக்கினார். நடிகர் பிரேம்ஜி நடிப்பில் இந்தப் படம் உருவானது. 

இந்த படத்தில் பிரேம்ஜியுடன் பிக்பாஸ் ரேஷ்மா, ஸ்வயம் சித்தா, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் லட்சுமி பாட்டி நடித்துள்ளார். சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை நகைச்சுவைக் கலந்து இப்படத்தை எடுத்துள்ளனர்.

இப்படத்தை சமீர் பரத் ராம் தயாரித்துள்ளார். ஆர்.பி. சரண் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், ரகுராம் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். இப்படம் கடந்த  ஜூலை 21-ஆம் தேதி வெளியானது. 

சுரேஷ் சங்கையாவின் கிடாயின் கருணை மனு படம் பெரிய அளவில் விமர்சன ரீதியாக ஆதரவு கிடைத்ததால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்தது. கலவையான விமர்சனங்கள் பெற்றதால் படத்துக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. 

தற்போது நவ.24ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் வெளியாக உள்ளது. சில படங்கள் திரையரங்குகளில் கவனிக்கப்படாமல் ஓடிடியில் வந்தப் பிறகு கவனம் பெறும். அதுபோல இந்தப் படத்துக்கு ஆகுமா எனப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.