முகப்பு
செய்திகள்

லண்டனில் மாளவிகா மோகனன்: வைரல் புகைப்படங்கள்! 

நடிகை மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. 

Updated On : 9 அக்டோபர் 2023, 8:22 pm IST
பகிர்:

பிரபலமான ஈரான் இயக்குநர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் 2017இல் வெளியான பியாண்ட் தி கிளவுட்ஸ் எனும் படத்தில் மாளவிகாவின் நடிப்பு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. தமிழில் நடிகர் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் மூலம் நடிகையாக மாளவிகா மோகனன் அறிமுகமானார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் பெரும் வெற்றி பெற்றது. பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

பயணம் செய்வதில் ஆர்வமுடைய மாளவிகா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில், “ஹலோ லண்டன்” எனக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.