மகளின் பெயரை அறிவித்த நடிகர் புகழ்!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் புகழ், தனது மகளின் பெயரை அறிவித்துள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் புகழ், தனது மகளின் பெயரை அறிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி, அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதிக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் புகழ்.
இதனைத் தொடர்ந்து, தற்போது திரைபடங்களிலும் நடித்து வருகிறார். மிஸ்டர் ஸூ கீப்பர், துடிக்கிறது மீசை என்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
கைதி, வலிமை, எதற்கும் துணிந்தவன், ஆகஸ்ட் 16 1947 உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் புகழ் நடித்திருந்தார்.
இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி பென்ஸி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
முன்னதாக, புகழ் - பென்ஸி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் நடிகர் புகழ், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளின் பெயரை அறிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், "என் வாழ்வை புன்னகையால் இன்புறச் செய்ய தவமாய் கிடைத்த அழகியடி நீ.. கம்பன் இன்றிருந்தால் உனக்கென தனிக்கவிதையே வடித்திருப்பானடி... ஊரே கண் வைக்கும் அளவிற்கு, பிரம்மன் வடித்த காவியம் நீயடி என் செல்ல மகளே.
கவிதைக்கு தனிப்பெயர் தேவையில்லை..., இருந்தாலும், எங்கள் வாழ்வை வசந்தமாக்கிய எங்கள் தேவதை தனித்து தெரியவே, இன்று முதல் நீ, பு.ரித்தன்யா என்று அழைக்கப்பட இருக்கிறாய் அன்பு மகளே.
எங்களின் மகாராணிக்கு பு.ரித்தன்யா என்ற பெயரை வைத்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கதாநாயகியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பிரபலம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.