கதீஜா ரஹ்மானின் முதல் பாடலை வெளியிட்ட அனிருத்!
ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைத்த முதல் பாடலை அனிருத் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் ஹலிதா ஷமீமின் "மின்மினி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான். முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் குடும்பத்தில் இருந்து வந்த கதீஜா, ஏற்கெனவே பல பாடல்களில் தனது குரல் மூலம் இசை ஆர்வலர்களின் கவனத்தை வென்றுள்ளார்.
"மின்மினி' படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்ற செய்தியை படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். "மின்மினி' படத்தை ஹலிதா ஷமீம் எழுதி இயக்குகிறார், மனோஜ் பரமஹம்சா தயாரித்து, ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நடிகர்களின் உண்மையான வயதையும் பருவத்தையும் திரையில் காட்ட வேண்டும் என்பதற்காக எட்டு வருடங்களாக காத்திருந்து ஒரு திரைப்படத்தை படமாக்கும் அதன் முயற்சி சினிமா பார்வையாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
Advertisement
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஆங்கர் பே ஸ்டுடியோவுடன் இணைந்து "மின்மினி' படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் எஸ்தர் அனில், பிரவின் கிஷோர், கெளரவ் காளை, பிரவின் மற்றும் கெளரவ் ஆகியோர் முதன்மை நடிகர்களாக நடித்துள்ளனர்.
அனிருத் இந்தப் படத்தின் முதல் பாடலை நேற்று மாலை வெளியிட்டுள்ளர். இதனை வெளியிட்டு அனிருத், “இந்தப் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி. இசையமைப்பாளராக அறிமுகமாகும் கதீஜா ரஹ்மானுக்குக்கும் படக்குழுவுக்கும் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.