முகப்பு
செய்திகள்

என்னை ஆள்வைத்து அடித்தார் வடிவேலு: பிரபல நடிகர் வேதனை!

நடிகர் வடிவேலு தன்னை அடித்ததாக பிரபல நடிகர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 1 ஆகஸ்ட் 2023, 2:46 pm IST
பகிர்:

மாமன்னன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் வடிவேலுக்கு புதிய திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. 

அவர் நடிப்பில் தயாரான ‘சந்திரமுகி - 2’ திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. 

இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான ‘காதல்’ சுகுமார் யூடியூப் சேனல் ஒன்றில் தன் சினிமா வாழ்க்கையைக் குறித்துப் பேசினார்.

Advertisement

Advertisement

அப்போது, “கலகலப்பு என்கிற படத்தில் பொன்னம்பலத்துடன் நடிகர் வடிவேலுவின் உடல்மொழியில் நடித்தேன். அதன்பின், ஒருநாள் நகைச்சுவை நடிகர்கள் போண்டா மணியும் முத்துக்காளையும் வடிவேலு என்னைக் காண ஆசைப்படுவதாகக் கூறி அழைத்துச் சென்றனர். நானும் என் குருநாதரைக் காணப்போகிறேன் என்கிற ஆர்வத்தில் அவரை தனியறை ஒன்றில் சந்தித்தேன். என்னைப்போலவே நடிக்கிறாய் எனப் பாராட்டினார். பின், முத்துக்காளையும் போண்டாமணியும் அறையைவிட்டு வெளியேறியதும் நானும் கிளம்ப தயாரானேன். ஆனால், வடிவேலு என்னை இருக்க சொல்லி, ஏன் என்னை மாதிரியே நடிப்பேன் எனக்கூறி ஒவ்வொரு கம்பெனியாக ஏறிக்கொண்டிருக்கிறாய் எனக் கேட்டார். நான் அப்படியெல்லாம் செய்யவில்லை. ஒரு வாய்ப்பு கிடைத்தது அதனால்தான் அப்படத்தில் நடித்தேன் என்றதுடன் இனிமேல் உங்களைப்போல் நடிக்க மாட்டேன் என அவரிடம் சொன்னேன். திடீரென, பேசிக்கொண்டிருக்கும்போதே பின்னால் இருந்து சிலர் தாக்கத் தொடங்கினர். தாறுமாறாக அடிவிழுந்தது. அவர்களிடம் கெஞ்சி அங்கிருந்து தப்பி வந்தேன்” என வேதனையுடன் கூறியுள்ளார். 

சுகுமார்

இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.