4 தேசிய விருதுகளைப் பெற்ற பாலிவுட் கலை இயக்குநர் தற்கொலை!
‘ஜோதா அக்பா்’, ‘லகான்’ உள்ளிட்ட திரைப்படங்களில் கலை இயக்குநராகப் பணிபுரிந்த நிதின் தேசாய் (57) புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
‘ஜோதா அக்பா்’, ‘லகான்’ உள்ளிட்ட திரைப்படங்களில் கலை இயக்குநராகப் பணிபுரிந்த நிதின் தேசாய் (57) புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
‘என்டி ஆா்ட் வோ்ல்ட்’ என்ற நிறுவனத்தை நடத்தி வரும் தேசாய்க்கு கடும் நிதிப் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரத்தின் ராய்கட் மாவட்டத்தின் கா்ஜத் பகுதியில் உள்ள அவரது ஸ்டுடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கடந்த 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் ஒரு நிதி நிறுவனத்திடமிருந்து வாங்கிய ரூ.185 கோடி கடனை தேசாய்க்குச் சொந்தமான நிறுவனம் திரும்பச் செலுத்தவில்லை. இதைத் தொடா்ந்து, கடன் மறுசீரமைப்புக்கான நடைமுறையைத் தொடங்க, கடனளித்த நிதி நிறுவனம் தேசிய நிறுவன சட்டத் தீா்ப்பாயத்தின் மும்பை கிளையை அணுகியது. அந்நிறுவனம் தாக்கல் செய்த விண்ணப்பம் கடந்த வாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
‘ஜோதா அக்பா்’, ‘தேவதாஸ்’, ‘பிரேம் ரத்தன் தான் பயோ’, ‘பரிந்தா’ உள்ளிட்ட திரைப்படங்களின் பிரம்மாண்ட செட்கள் கலை இயக்குநா் நிதின் தேசாயால் வடிவமைக்கப்பட்டன. அவரது மறைவுக்கு ஹிந்தி திரைப்பட நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.