ஜெயிலர் வெற்றி - நெல்சனுக்கு வாழ்த்து சொன்ன விஜய்!
ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் நடிகர் விஜய் இயக்குநர் நெல்சனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளாராம்.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. அதிகாலைக் காட்சிகள் எதுவும் இல்லையென்றாலும் தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும், உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.
முதல்நாளில் தமிழகத்தில் ரூ.29.46 கோடியையும் ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் ரூ.12.04 கோடியையையும் கர்நாடகத்தில் ரூ.11.92 கோடி, கேரளத்தில் ரூ.5.38 கோடி, வெளிநாடுகளில் ரூ.32.75 கோடி என ஒட்டுமொத்தமாக உலகளவில் இப்படம் ரூ.95.78 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ஜெயிலர் - முதல்நாள் பிரம்மாண்ட வசூல் சாதனை!
இந்நிலையில், இயக்குநர் நெல்சனுக்கு நடிகர் விஜய் தொலைப்பேசியில் வாழ்த்துத் தெரிவித்துள்ளதாக தகவல்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.