படப்பிடிப்பில் விபத்து: சஞ்சய் தத்துக்கு தலையில் காயம்!
படப்பிடிப்பின்போது பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் - 2 திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்திலும் ‘ஆண்டனி தாஸ்’ என்கிற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
தற்போது, தெலுங்கில் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் ‘டபுள் ஸ்மார்ட்’ படத்தில் நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ஹைதராபாத்தில் கங்குவா படப்பிடிப்பு!
இந்நிலையில், இப்படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின்போது வாள் ஒன்று சஞ்சய் தத்தின் தலையில் பலமாக பட்டதாகவும் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு இரண்டு தையல் போடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.