விஜய் ஆண்டனியின் புதிய படம் அறிவிப்பு!
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நாயகனாக நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன் 2’, கொலை’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன.
இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ‘ரோமியோ’ என்கிற காதல் படமொன்றில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். நாயகியாக மிருணாளினி ரவி ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இதையும் படிக்க: படப்பிடிப்பில் விபத்து: சஞ்சய் தத்துக்கு தலையில் காயம்!
Advertisement
Advertisement
விஜய் ஆண்டனியே தயாரிக்கும் இப்படம் அடுத்தாண்டு(2024) கோடை வெளியீடாக திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.