10 கோடி பார்வைகளை கடந்த பையா பட பாடல்: லிங்குசாமி நெகிழ்ச்சி!
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியான பையா பட பாடல் யூடியூப்பில் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி-தமன்னா நடிப்பில் கடந்த 2010இல் வெளியான படம் பையா. யுவன் இசையில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றது.
‘துளி துளி’ எனும் பாடல்தன தற்போது யூடியூப்பில் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளை கடந்துள்ளது. காதல் பாடல்கள், சோகமான பாடல்கள் நா.முத்துகுமாரின் வரிகளில் இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | எல்சியூ நிச்சயம்?: லியோ பட டாட்டூடன் நடிகை த்ரிஷா!
Advertisement
Advertisement
ரசிகர்கள் இந்தப் படத்தின் ஓஎஸ்டி (ஒரிஜினல் சவுண்ட் டிராக்) வேண்டுமென கமெண்டுகளில் கேட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | ஜெய் பீம் படத்திற்கு ஏன் தேசிய விருது இல்லை?: நானி, பி.சி. ஸ்ரீராம் உள்பட பலரும் எதிர்ப்பு!
இந்நிலையில் இந்தப் பாடல் குறித்து இயக்குநர் லிங்குசாமி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “இது ஒரு சிறப்பான பாடல். அன்பிற்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.
பையா பட வெற்றிக்குப் பிறகு பையா 2 திரைப்படம் எடுக்க லிங்குசாமி ஆவலாக உள்ளார். இதற்காக ஆர்யா, ஜான்வி கபூரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.