சினிமா நபர்கள் குறித்த எனது பார்வையை மாற்றியவர் தமன்னா: விஜய் வர்மா
பிரபல ஹிந்தி நடிகர் விஜய் வர்மா தமன்னாவை ஏன் காதலித்தேன் என்பது குறித்து பேசியுள்ளார்.
தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.
தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். சமீபத்தில் தமன்னா நடிப்பில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ,போலா ஷங்கர், ஜெயிலர் ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றன.
இதையும் படிக்க: குழந்தைகளுடன் சைக்கிள் ஓட்டிய அஜித்தின் வைரல் விடியோ!
Advertisement
Advertisement
பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் காதல் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில் தற்போது நேர்காணல் ஒன்றில் நடிகை தமன்னா அதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிக்க: தெலுங்கு சீரியலுக்குச் செல்லும் ஈரமான ரோஜாவே நடிகை!
இந்நிலையில் இது குறித்து விஜய் வர்மா, “நான் சினிமா சம்பந்தப்பட்டவர்களை டேட்டிங் செய்யக்கூடாதென இருந்தேன். ஏனெனில் சினிமா ஆள்களை நினைத்து கோபமாக இருந்தேன். ஒரே தொழில் செய்பவர்களுக்கு அதன் விளையாட்டு, பணம் சம்பந்தப்பட்ட அனைத்தும் தெரியும். அது ஒரு மாதிரி இருக்குமென நினைத்திருந்தேன். ஆனால் தமன்னாவை சந்தித்தப் பிறகு எனது பார்வையே மாறியதே. தமன்னாவின் அனுபவமும் நல்லது செய்கிற குணமும் சரியாக கணிக்கிற ஆற்றலும் எனக்கு மிகவும் உதவியது. பல விஷயங்கள் குறித்து எனக்கு புதிய புரிதல்களை கொடுத்தார் தமன்னா. நான் எதையாவது நினைத்து கவலை கொண்டிருக்கும்போது தமன்னா அது குறித்து புதிய புரிதல்களை அளிப்பார்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: வடிவேலு பிறவிக் கலைஞன்: விஜயகாந்த்
தற்போது விஜய் வர்மா ஆப்கானி ஸ்னோ, மர்டர் முபாரக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமன்னா பந்த்ரா, வேதா ஆகியப் படங்களில் நடித்து வருகிறார். ஆக்ரி சச் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.