தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் அனுராக் காஷ்யப்.. இவர்தான் நாயகன்!
அனுராக் காஷ்யப் தமிழில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
ஹிந்தி சினிமாவில் பல்வேறு சோதனை முதற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர் அனுராக் காஷ்யப். இவரது படங்கள் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளது.
இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’, ‘ராமன் ராகவ்’, ’பிளாக் ஃப்ரைடே’ ஆகிய படங்கள் விமர்சகர்களால் பாராட்டுக்களைப் பெற்றது. தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார். லியோவிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிக்க: எப்படி இருக்கிறது அவள் பெயர் ரஜினி? திரை விமர்சனம்
Advertisement
Advertisement
இவரது அடுத்த படமான ‘கென்னடி’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில், அனுராக் காஷ்யப் தமிழில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாகவும் இப்படத்தில் நாயகனாக ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.