அழகைவிட கடின உழைப்பு முக்கியம்: நயன்தாரா
நடிகை நயன்தாரா அழகைவிட கடின உழைப்பு முக்கியம் எனக் கூறியுள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் பிசியாக நடித்து வந்த நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் ரூ. 1140 கோடி வசூலித்தது.
இதைத் தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த இறைவனும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அன்னபூரணி படம் (டிச.1) சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன.
இதையும் படிக்க: அனைத்து புயலினாலும் பாதிக்கப்படும் பாறை ‘கீதாஞ்சலி’: ராஷ்மிகாவின் வைரல் பதிவு!
Advertisement
Advertisement
அன்னபூரணி படத்தின் புரமோஷனுக்கான நேர்காணலில் நடிகை நயன்தாரா, “லேடி சூப்பர் ஸ்டார் என 10 பேர் பாராட்டினால் 50 பேர் திட்டுவார்கள். என்னைப் பொறுத்த வரையில் அழகைவிட கடின உழைப்புதான் முக்கியம். எனக்கு எது சரியாக தோன்றுகிறதோ அதைதான் செய்கிறேன்.
இதையும் படிக்க: அல்லு அர்ஜுனின் இதயத்தை உடைத்த நடிகை: யாரிந்த த்ரிப்தி டிம்ரி?
கடின உழைப்பில் நம்பிக்கையுள்ளவர் நான். கடின உழைப்பினை தவிர நாம் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்க வேண்டும். ஆனால் இதெல்லாம் மீறியும் நம்மிடம் திறமை இருக்கோ இல்லையோ, பார்ப்பதற்கு அழகாக இருக்கிறமோ இல்லையோஉழைப்பு மிகவும் முக்கியம். அதுதான் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. நான் எனது வாழ்க்கையில் அதைதான் செய்துள்ளேன்.
தவறு செய்தால் திட்டுவேன். ஆனால் சுயமரியாதை முக்கியம். அதை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன். நான் மற்றவர்களை மதிப்பாக நடத்துவேன்; நன்றாக நடத்துவேன். என்னிடமும் மற்றவர்கள் அப்படிதான் நடக்க வேண்டுமென எதிர்பார்ப்பேன்” எனக் கூறியுள்ளார்.
இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.