பிரசாந்த் நீல் கதை: ஹொம்பாலே ஃபிலிம்ஸின் தயாரிப்பில் பஹீரா டீசர்!
ஹொம்பாலே ஃபிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தின் டீசர் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
கேஜிஎஃப், காந்தாரா, சலார் ஆகிய படங்களை தயாரித்துள்ள ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பஹீரா படம் உருவாகியுள்ளது.
கேஜிஎஃப் புகழ் இயக்குநர் பிரசாந்த் நீலின் பஹீரா கதையை இயக்கியுள்ளார் இயக்குநர் டாக்டர் சூரி. இவர் 2012இல் யஷ் வைத்து லக்கி எனும் படத்தினை இயக்கியுள்ளார்.
இதையும் படிக்க: ‘மாவீரன்' யோகி பாபு பாணியில் பதிவிட்ட விக்ரம்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
பிரபாஸ் நடிப்பில் இயக்குநர் பிரசாந்த் நீலின் இயக்கத்தில் உருவாகியுள்ள சலார் படத்தில் கதையில் வசனம் எழுதியுள்ளார் டாக்டர் சூரி.
இந்தப் படத்தில் கன்னட நடிகர் ஸ்ரீமுரளி நாயகனாக நடித்துள்ளார். இவர் பிரசாந்த் நீலின் தங்கையை திருமணம் செய்துள்ளார். பிரசாந்த் நீலின் முதல் படத்தின் (உக்ரம்) நாயகனும் இவர்தான். கன்னடாவில் கண்டி, உக்ரம் ஆகிய படங்களின் மூலம் மிகவும் கவனம் பெற்ற நடிகராக அறியப்படுகிறார் ஸ்ரீமுரளி.
இந்தப் படத்டின் டீசர் இன்று வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. கே.ஜி.எஃப் படத்தின் மேக்கிங் சாயல் படத்தின் டீசரில் காண முடிகிறது. ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரித்தால் அது சிறப்பான படமாக இருக்குமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.