வெளியானது ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு படங்கள்
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் படம் ஜெயிலர். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க- ‘ஏகே 62’ போட்டியில் புதிய இயக்குநர்!
Advertisement
Advertisement
படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் இடம்பெறும் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில், படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.