நவ. 18-ல் தவெகவின் 2 ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!
தவெகவின் 2 ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது குறித்து...
தவெகவின் 2 ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவானது நவ. 18 ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் மையத்தில் நடைபெறவுள்ளது.
2023 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக 10, 12 ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தவெக சார்பில் ஊக்கத்தொகையுடன் கல்வி விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இந்தாண்டில், 10,12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விருது வழங்கும் முதல்கட்ட நிகழ்ச்சி கடந்த நவ. 4 ஆம் தேதி நடைபெற்றது. இதில் முதல்வர் விஜய் பங்கேற்று ஊக்கத்தொகை மற்றும் விருது வழங்கி மாணவர்களை கெளரவித்தார்.
இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் மையத்தில் வரும் நவ. 18 ஆம் தேதி தவெகவின் 2 ஆம் கட்ட கல்வி விருது விழா நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட நிகழ்ச்சி நவ. 27 ஆம் தேதி நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக கல்வி விருது வழங்கும் விழாவானது, ஒரு கட்டத்துக்கு 30 தொகுதிகள் வீதம் மொத்தம் 8 கட்டங்களாக நடத்த, தவெகவினர் திட்டமிட்டுள்ளனர்.