நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்த ‘மாவீரன்’ பட விடியோ!
நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு விடியோவை பகிர்ந்துள்ளார்.
மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.
டாக்டர், டான் வெற்றிப் படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கிறார்.
பிரின்ஸ் படத்தின் தோல்விக்குப் பிறகு இந்தப் படம் வெளியாக உள்ளதால் இதில் மிகவும் கவனமாக நடித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். பரத் சங்கர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான ப்ரின்ஸ் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அதனால் இந்த மாவீரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்தப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை பிரபல சரிகம சவுத் நிறுவனம் சமீபத்தில் வாங்கியுள்ளது.
இதையும் படிக்க: ‘திருச்சிற்றம்பலம்’ பட இயக்குநரின் அடுத்த படம் குறித்த அப்டேட்!
மோகோபாட் எனும் இந்த காமிரா இதற்குமுன் விஜய்யின் பீஸ்ட், கமல் ஹாசனின் விக்ரம், அஜித்தின் துணிவு படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கார்த்தி நடித்துவரும் ஜப்பான் படத்திலும் இது பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் படத்திலும் இந்த மோகோபாட் காமிரா பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காமிரா சண்டைக்காட்சிகளை சிறப்பாக படம்பிடிக்க பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒன்று.
இதனை சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு இருந்தார். இந்த விடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.