தனுஷ் படத்துடன் மோதும் ஜெயம் ரவி?
கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
பூலோகம் படத்துக்கு பிறகு இயக்குநர் கல்யாண கிருஷ்ணனுடன் ஜெயம் ரவி இணைந்திருக்கும் படம் அகிலன். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதையும் படிக்க: தெலுங்கில் மாபெரும் வரவேற்பு: ‘வாரிசு’ திரைப்படம் 3 நாளில் ரூ.100 கோடி வசூலா?
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் தான்யா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வெளிவரயிருந்த அகிலன் படம் தற்போது பிப்ரவரியில் ரிலீஸாகுமென தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: ‘ரஞ்சிதமே பாடலுக்கு கருவிலுள்ள குழந்தையும் அசைகிறது’- விடியோ பகிர்ந்து தமன் நெகிழ்ச்சி!
துணிவு, வாரிசு திரைப்படம் ஜனவரியில் ஆதிக்கம் செலுத்தினாலும் பிப்ரவரியில் தனுஷின் வாத்தி மட்டுமே ரிலீஸாகுகிறது. இதனால் படக்குழு அகிலன் திரைப்படத்தினை பிப்ரவரியில் ரிலீஸ் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.