நிறமிழக்கும் அரிய வகை நோயினால் பாதித்த நடிகை!
பாடகியும் நடிகையுமான மம்தா மோகன்தாஸ் அறிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை சமந்தாவை தொடர்ந்து நடிகையும் பாடகியுமான மம்தா மோகன்தாஸ்க்கும் அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியளித்துள்ளது.
தமிழில் 2016இல் சிவப்பதிகாரம் படத்தில் அறிமுகமானார் மம்தா மோகன்தாஸ். குரு என் ஆளு, தடையற தாக்க, எனிமி போன்ற படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் அதிகமான படங்களில் நடித்துள்ளார். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிக்க: துணிவு பொங்கலா? வாரிசு பொங்கலா?’ - ரெட் ஜெயண்ட் அதிரடி ட்வீட்!
Advertisement
Advertisement
38 வயதான இவருக்கு தற்போது தோல் நிறமி இழத்தல் (vitiligo) எனும் இது தோலின் நிறமி செல்கள் இறப்பதால் அல்லது தொடர்ந்து வேலை செய்ய முடியாததால் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உடலில் ஏற்படுவதற்கான தெளிவான ஒரு காரணம் மட்டும் இல்லை என்றாலும், மரபணு, அல்லது சில வைரஸ் தொற்றுகளால் ஏற்படலாம் என அறியப்படுகிறது.
மம்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தினைப் பகிர்ந்து, “நான் நிறமிழந்து வருகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவுக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் ஆறுதலும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளையும் கூறிவருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.