முகப்பு
செய்திகள்

சந்தானத்தின் பிறந்தநாளில் வெளியானது ‘கிக்’ படத்தின் டிரைலர்! 

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள கிக் படத்தின் டிரைலர் வெளியானது. 

Updated On : 21 ஜனவரி, 2023 at 5:32 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:22 PM

சந்தானம் நடிப்பில் கடந்த வருடம் பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி ஆகிய படங்கள் வெளியாகின. இறுதியாக ‘குலு குலு’, ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ திரைப்படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் அவருடைய 15-வது படமான ‘கிக்’ படத்தை லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற கன்னடப் படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இயக்குகிறார். 

தாராள பிரபு படத்தில் கதாநாயகியாக நடித்த தான்யா ஹோப் இப்படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடிக்கிறார். பாக்யராஜ், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோ பாலா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி போன்றோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் பெங்களூரில் நடைபெற்றது. மேலும் சென்னை, பாங்காங், லண்டன் எனப் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இசை - அர்ஜுன் ஜன்யா. 

Advertisement

இந்நிலையில் சந்தானத்தின் 42வது பிறந்தநாளில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. காதல், நகைச்சுவை கலந்த ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளதாக டிரைலரை பார்க்கும் போது யூகிக்க முடிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.