விஷால் படத்தில் இணைந்த ‘புஷ்பா' பட வில்லன்!
விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் இணைந்துள்ளார் புஷ்பா பட வில்லன் சுனில்.
'திரிஷா இல்லனா நயன்தாரா' படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். பின்னர் சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார்.
இதனையடுத்து பிரபு தேவா நடிப்பில் பகீரா என்ற படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் விஷாலுடன் கைகோர்த்துள்ளார்.
இதையும் படிக்க: ‘8 வருஷமாக அஜித்தை சந்திக்க முயன்று சோர்வடைந்து விட்டேன்’- இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் வேதனை!
Advertisement
Advertisement
'மார்க் ஆண்டனி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துவருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜ சேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதையும் படிக்க: ‘ரஞ்சிதமே பாடலுக்கு கருவிலுள்ள குழந்தையும் அசைகிறது’- விடியோ பகிர்ந்து தமன் நெகிழ்ச்சி!
புஷ்பா திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய சுனில் இப்படத்தில் இணைந்துள்ளார். தெலுங்கில் பிரபல காமெடினான சுனில், நாயகனாக சில படங்களில் நடித்தார். தற்போது, குணசித்தர வேடங்களில் கலக்கி வருகிறார். ஏற்கனவே, சிவகார்த்திகேயன், ஜெயிலர் படங்களில் இவர் ஒப்பந்தமாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.