எதிர்நீச்சல் தொடரிலிருந்து விலகிய முக்கிய பிரபலம்!
எதிர்நீச்சல் தொடரிலிருந்து முக்கிய பிரபலம் ஒருவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் தொடரிலிருந்து முக்கிய பிரபலம் ஒருவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் தொடருக்கு இல்லத்தரசிகளிடையேயும், பார்வையாளர்கள் இடையேயும் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. இந்த தொடர் இரவு 9.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
கோலங்கள் தொடரை இயக்கிய திருச்செல்வம், திரைக்கதை எழுதி எதிர்நீச்சல் தொடரை இயக்கி வருகிறார். கோலங்கள் தொடரில் நடித்த ஸ்ரீவித்யா வசனம் எழுதுகிறார்.
Advertisement
Advertisement
மதுமிதா, சபரி பிரசாந்த், கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, ஜி. மாரிமுத்து, சத்தியப்பிரியா உள்ளிட்ட பலர் இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: இந்திய அளவில் முதலிடம் பிடித்த வீரன்!
இந்நிலையில், எதிர்நீச்சல் தொடரில் அருண் குமார் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாணக்யா, இத்தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஆதிரைச் செல்வி கதாபாத்திரத்தின் காதலராக நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.