முகப்பு
செய்திகள்

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஜூலை 2023, 1:04 pm IST
கோப்புப்படம்
பகிர்:

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்த திரைப்படம் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்.  இந்தப் படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார்.

இப்படம் கடந்த ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமரிசனங்களை பெற்றது. இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். 

Advertisement

Advertisement

கொம்பன், குட்டிபுலி, தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, விருமன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய முத்தையா, இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் ஜூலை 7 ஆம் தேதி  ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments