கனவை சாத்தியப்படுத்தியதற்கு நன்றி ரஞ்சித்: விக்ரம்
தங்கலான் படத்திற்காக இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விக்ரம்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: 2018 திரைப்பட இயக்குநருடன் கைகோர்த்த லைகா!
Advertisement
Advertisement
நடிகை பார்வதிக்கான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இந்நிலையில் படக்குழு படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
நடிகர் விக்ரம் தன் டிவிட்டர் பக்கத்தில், “அற்புதமான மனிதர்களுடன் 118 நாள்கள் பணியாற்றியது சட்டென ஓடிவிட்டது. ஒரு நடிகராக உற்சாகமான அனுபவங்களைப் பெற்றேன். என்ன ஒரு பயணம்.. இந்தக் கனவை ஒவ்வொரு நாளும் சாத்தியப்படுத்தியதற்கு நன்றி ரஞ்சித்” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.