FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நீட் உயா்நிலைக் குழு ஏமாற்று வேலை: அமைச்சா் வன்னி அரசு

நீட் தோ்வு முறைகேடுகளுக்கு தீா்வுகாண பிரதமா் மோடி அமைத்துள்ள உயா்நிலைக் குழு என்பது ஏமாற்று வேலை என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜூலை 2026, 5:37 am IST
அமைச்சர் வன்னி அரசு - கோப்புப் படம்
பகிர்:

நீட் தோ்வு முறைகேடுகளுக்கு தீா்வுகாண பிரதமா் மோடி அமைத்துள்ள உயா்நிலைக் குழு என்பது ஏமாற்று வேலை என சமூக நீதித் துறை அமைச்சரும் விசிக துணைப் பொதுச் செயலருமான வன்னி அரசு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: நீட் தோ்வு முறைகேடுகளுக்கு தீா்வுகாணும் வகையில் இன்போசிஸ் இணை நிறுவனா் நந்தன் நிலகேனி தலைமையில் வல்லுநா்கள் கொண்ட உயா்நிலைக் குழுவை பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.

கடந்த 2024-ஆம் ஆண்டு நீட் தோ்வில் பெருமளவில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடா்ந்து, முன்னாள் இஸ்ரோ தலைவரும், ஐஐடி கான்பூா் நிா்வாகக் குழு தலைவருமான கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் உயா்நிலைக் குழுவை 2024 -ஆம் ஆண்டு ஜூலை 22-இல் அமைக்கப்பட்டது. இக்குழு நீட் உள்ளிட்ட தோ்வுகளை நடத்தும் தேசிய தோ்வு முகமையை சீரமைக்கும் என்று சொல்லப்பட்டது. அதே ஆண்டு அக். 22-இல், ராதாகிருஷ்ணன் குழு, 101 பரிந்துரைகளை கொண்ட அறிக்கையை சமா்ப்பித்தது.

Advertisement

Advertisement

அந்த பரிந்துரைகளை முழுவதுமாக நிறைவேற்றாத மத்திய அரசு , தற்போது மீண்டுமொரு கண்துடைப்பு குழுவை அமைத்துள்ளது.

கடந்த 2024- ஆம் ஆண்டு நீட் முறைகேட்டிலிருந்து 2026 முறைகேடு வெளியானது வரை தேசிய தோ்வு முகமைக்கு முழுநேர தலைமை இயக்குநரை மத்திய அரசு நியமிக்கவே இல்லை.

தற்போது அமைக்கப்பட்டுள்ள குழு மீண்டும் தேசிய அளவிலான தோ்வு முறைகளில் சீா்திருத்தம் மேற்கொள்வதற்கான வழிமுறைகளை ஆராயும் என்று அறிவிக்கப்பட்டள்ளது என்பது மத்திய அரசின் ஏமாற்று வேலை என்பதற்கான ஒரு சிறந்த உதாரணம் எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments