ரஜினிக்கு வில்லனாகும் அர்ஜுன்?
நடிகர் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர், லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின் ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இதில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகவும் தகவல்.
Advertisement
Advertisement
முதலில் இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வைக்க நடிகர் விக்ரமிடம் படத்தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் ரூ.50 கோடி சம்பளம் கொடுக்க முன்வந்தும் விக்ரம் மறுத்ததாகவும் தகவல் வெளியானது.
இதையும் படிக்க: கங்குலி பயோபிக்... இவரா இயக்குநர்?
இந்நிலையில், ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் அர்ஜுனிடம் தயாரிப்பு நிறுவனம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, அர்ஜுன் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.