FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

விஜய் தேவரகொண்டாவின் 13வது படம்: வைரலாகும் பூஜை புகைப்படங்கள்!

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 13வது திரைப்பட பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Updated On : 14 ஜூன் 2023, 4:47 pm IST
பகிர்:

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக அறியப்பட்டார் விஜய் தேவரகொண்டா. இவரது 13வது திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

2019இல் தெலுங்கில் வெளியான ‘ஜெர்ஸி’ திரைப்படத்தின் இயக்குநர் கௌதம் தின்னானுரியின் படத்தில் இணைந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. நானி நடிப்பில் அனிருத் இசையில் வெளியான ஜெர்ஸி திரைப்படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. இது இவரது 12வது படமென சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.  இது வெளியாகும்முன் தற்போது 13வது (விடி13) படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. எஸ்விசியின் 54வது படமாக இது தயாராக உள்ளது. 

Advertisement

Advertisement

வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பரசுராம் பெட்லா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் மிருணாள் தாக்குர் நடிக்கின்றனர். 2018இல் வெளியாகி அமோக வரவேற்பினை பெற்ற கீதா கோவிந்தம் படத்தினை இயக்கியவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆஸ்தான இசையமைப்பாளர் கோபி சுந்தரும் இந்தப் படத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் பூஜை புகைப்படங்கள், விடியோக்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

விஜய் தேவரகொண்டா தற்போது சமந்தாவுடன் குஷி படத்தில் நடித்து வருகிறார். அடுத்து கௌதம் தின்னானுரியின் படத்திலும் நடித்து வருகிறார். 

மிருணாள் தாக்குர் உடன் விஜய் தேவரகொண்டா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments