முகப்பு
செய்திகள்

மாமன்னன் டிரைலர் தேதி அறிவிப்பு

மாமன்னன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:00 PM
பகிர்:

மாமன்னன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களுக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்கிற படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வடிவேலு பாடிய ‘ராசாக்கண்ணு’ பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை(ஜூன் - 16) வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.